கண் கன்ஜக்டிவிடிஸ், கருவிழிப் புண்கள் மற்றும் வெளிச்செவி அழற்சி போன்ற கண்கள் மற்றும் காதுகளில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன சிப்லாக்ஸ் கண்/காது சொட்டு மருந்துகள். அவை தொற்றினால் ஏற்படும் சிவத்தல், சீழ் வடிதல், வலி, வீக்கம் மற்றும் எரிச்சல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.
அவற்றில் சிப்ரோஃப்ளோக்சசின் என்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துள்ளது. அது, தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது.
சொட்டு மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் உங்கள் கைகளைக் கழுவவும், மேலும் பரிந்துரைத்த மருந்தளவை பின்பற்றவும். சொட்டு மருந்தின் நுனி எந்தவொரு பரப்பிலும் பட அனுமதிக்காதீர்கள்.
மருந்தை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் டாக்டரை அணுகி ஆலோசிக்கவும். அறிகுறிகள் நீடித்தாலோ அல்லது மோசமடைந்தாலோ டாக்டரின் ஆலோசனையை அவசியம் பெறவும்.













































































