தும்மல், மூக்கு ஒழுகுதல், கண்களில் அரிப்பு அல்லது நீர் வடிதல், ஸ்கின் தடிப்புகள் மற்றும் அலர்ஜிக் அரிப்புகள் போன்ற அலர்ஜி அறிகுறிகளைப் போக்க ஓகாசெட் டேப்லெட் பயன்படுகிறது. இதில் செடிரிசின் என்ற ஆன்டிஹிஸ்டமைன் உள்ளது, இது உடலில் அலர்ஜிக் எதிர்வினைகளைத் தூண்டும் கெமிக்கலை தடுக்கிறது.
இது பருவகால அலர்ஜிகள், சுற்றுச்சூழல் அலர்ஜிகள் மற்றும் நாள்பட்ட யூர்டிகேரியா (தடிப்பு நோய்) போன்ற கண்டிஷன்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பரிந்துரைத்தவாறு உணவுடனோ அல்லது உணவு உண்ணாமலோ மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள். மேலும், அறிகுறிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, உங்கள் அலர்ஜி காலத்தில் இந்த மருந்தை தவறாமல் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
தூசி, மகரந்தம் அல்லது செல்லப்பிராணிகளின் உதிர்ந்த முடி போன்ற அலர்ஜியைத் தூண்டும் காரணிகளை முடிந்தவரை தவிர்ப்பதும், உங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பதும், மற்றும் உலர்ந்த துணியால் துடைப்பதற்குப் பதிலாக ஈரத்துணியால் தூசியைத் துடைப்பது போன்ற செயல்கள் இந்த மருந்துடன் சேர்த்து அலர்ஜி அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன.
இந்த மருந்து உட்கொள்ளத் தொடங்குவதற்கு முன், உங்களுக்கு கிட்னி அல்லது லிவர் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தாலோ அல்லது நீங்கள் வேறு மருந்துகளை எடுத்துக்கொண்டாலோ உங்கள் டாக்டரிடம் ஆலோசிக்கவும். உங்களுக்கு இந்த மருந்து அதிக தூக்கக் கலக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் டாக்டரிடம் ஆலோசிக்கவும், ஏனெனில் இது வாகனம் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும்.














































































