அசித்ரல்-500 டேப்லெட் என்பது தொண்டை, லங்ஸ், ஸ்கின், காதுகள், சிறுநீர்ப் பாதை மற்றும் இனப்பெருக்கப் பாதை ஆகியவற்றில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்தாகும். இது டைபாய்டு ஃபீவர் மற்றும் சில பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கும் பயன்படுகிறது.
இதில் அசித்ரோமைசின் என்ற மேக்ரோலைடு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து உள்ளது. இது பாக்டீரியா வளர்வதைத் தடுப்பதன் மூலம், உடலில் உள்ள தொற்றை அகற்ற உதவுகிறது.
டேப்லெட்டை பரிந்துரைத்தபடி சரியாக எடுத்துக்கொள்ளவும், மேலும் உங்கள் உடல்நிலை தேறத் தொடங்கினாலும் மருந்தின் முழு சிகிக்சை காலத்தையும் நிறைவு செய்யுங்கள்.
சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன், உங்களுக்கு லிவர் பிரச்சனைகள் அல்லது இருதய துடிப்பு பிரச்சனைகள் இருந்தால் உங்கள் டாக்டரிடம் ஆலோசிக்கவும். மேலும், படபடப்பு அல்லது ஸ்கின் அல்லது கண்கள் மஞ்சள் நிறமாக மாறினாலும் டாக்டரிடம் கலந்து ஆலோசிக்கவும்.

























































































