பாண்டோசிட் டிஎஸ்ஆர் கேப்ஸ்யூல் என்பது அமிலப் பின்னோட்டம், காஸ்ட்ரோஈசோபாகல் ரீஃப்ளக்ஸ் நோய் (GERD), கேஸ்ட்ரைட்டிஸ் மற்றும் பெப்டிக் அல்சர் உள்ளிட்ட அமிலம் தொடர்பான செரிமானக் கோளாறுகளை நிர்வகிக்க பயன்படும் மருந்துதாகும். இது நெஞ்செரிச்சல், அஜீரணம், குமட்டல் மற்றும் வயிற்று அசௌகரியம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளித்து, செரிமானப் பாதையின் உள்சவ்வை குணமடைய உதவுகிறது.
இந்த மருந்தில் வயிற்றில் அமிலத்தின் உற்பத்தியைக் குறைக்கும் பாண்டோபிரசோல் என்னும் பொருளும் மற்றும் செரிமானப் பாதை வழியாக உணவை நகர்த்த உதவும் டோம்பெரிடோன் என்னும் பொருளும் அடங்கியுள்ளன.
உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கேப்ஸ்யூலை எடுத்துக்கொள்ளவும். மேலும் பரிந்துரைத்த மருந்தளவை கவனமாகப் பின்பற்றவும்.
சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன், உங்களுக்கு லிவர், கிட்னி அல்லது இருதயம் தொடர்பான ஏதேனும் நோய்கள் இருந்தால் உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.



















































































