ரீகோபிரஸ் 500 மிகி டேப்லெட் என்பது மதுப்பழக்கத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். இது மதுவுடன் வினைபுரிந்து குமட்டல், முகம் சிவத்தல் மற்றும் தலைவலி போன்ற விரும்பத்தகாத பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, இம்மருந்தை உட்கொள்ளும் காலத்தில் நோயாளி மது அருந்துவதைத் தவிர்க்கத் தூண்டப்படுகிறார். ரீகோபிரஸ் 500 மிகி டேப்லெட்டை உணவருந்தியோ அல்லது உணவருந்தாமலோ உட்கொள்ளலாம். உங்கள் டாக்டர் பரிந்துரைத்தபடியே இம்மருந்தை உட்கொள்ளுங்கள்; ஒருவேளை மருந்தை உட்கொள்ள மறந்துவிட்டால், அது நினைவுக்கு வந்தவுடன் உட்கொள்ளுங்கள். எந்த வேளையும் மறக்காமல், மருந்தை தவிர்க்காமல், முழு சிகிச்சை காலத்திற்கும் மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள். டாக்டரை அணுகாமல் இம்மருந்தை திடீரென நிறுத்தக்கூடாது. இம்மருந்தை உட்கொள்ளும் காலத்தில் பீர், ஒயின், ஆஃப்டர்ஷேவ் லோஷன்கள், மவுத்வாஷ், வினிகர் மற்றும் திரவ மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான அல்கஹால் உள்ள பொருட்களையும் தவிர்க்கவும்.

























































