ஓமீ கேப்ஸ்யூல் என்பது காஸ்ட்ரோஈசோபாகல் ரீஃப்ளக்ஸ் நோய் (GERD), நெஞ்செரிச்சல், அமில அஜீரணம் மற்றும் பெப்டிக் அல்சர் நோய் போன்ற, வயிற்றில் அதிகப்படியான அமிலம் உற்பத்தியுடன் தொடர்புடைய கண்டிஷன்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் ஒரு மருந்தாகும். இது வயிற்றின் அதிகப்படியான அமிலத்தைக் குறைத்து, வயிற்றின் உட்புறச் சுவரைப் பாதுகாத்து, குணமடைவதை ஊக்குவிக்கிறது.
இதில் புரோட்டான் பம்ப் தடுப்பானான ஒமெப்ரஸோல் உள்ளது. இது, வயிறு உற்பத்தி செய்யும் அமிலத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது.
சிறந்த பலனைப் பெற, உணவுக்கு முன் இந்த கேப்ஸ்யூலை உட்கொள்ளுங்கள். மேலும், பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் கால அளவைப் பின்பற்றுங்கள்.
உங்களுக்குக் லிவர் நோய் இருந்தால் அல்லது வேறு மருந்துகளை உட்கொண்டால் உங்கள் டாக்டரிடம் கலந்து ஆலோசிக்கவும். ஏனெனில், இது சில மருந்துகளுடன் வினைபுரியக்கூடும்.











































































