கிளாவம் 625 டேப்லெட் என்பது சுவாசப் பாதை, சிறுநீர் அமைப்பு, ஸ்கின், எலும்புகள் மற்றும் மென்மையான திசுக்களைப் பாதிக்கும் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்தாகும். இது அமோக்ஸிசிலின் மற்றும் கிளாவுலானிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டு நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்தாகும்.
கிளாவுலானிக் அமிலம், பாக்டீரியா நொதிகள் அமோக்ஸிசிலினைச் செயலிழக்கச் செய்வதைத் தடுக்கிறது. எனவே, இது எதிர்ப்புத்திறன் கொண்ட பாக்டீரியாக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. உங்கள் டாக்டர் பரிந்துரைத்த மருந்தளவு, இடைவெளி மற்றும் கால அளவில், உணவுடனோ அல்லது உணவு இல்லாமலோ இதை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு உடல்நிலை தேறத் தொடங்கினாலும், முழுப் சிகிச்சைக் காலத்தையும் நிறைவு செய்யுங்கள்.
உங்கள் டாக்டரின் ஆலோசனையின்படி, சிகிச்சை காலத்தில் புரோபயாடிக் தயிர் அல்லது யோகர்ட் எடுத்துக்கொள்வதன் மூலம், ஆன்டிபயாடிக் பயன்பாட்டினால் ஏற்படும் வயிற்றுக் கோளாறைக் குறைக்க உதவக்கூடும்.
மருந்தை உட்கொள்ளத் தொடங்கும் முன், பென்சிலின் அல்ர்ஜி ஏதேனும் இருந்தால் அல்லது லிவர் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அது பற்றி உங்கள் டாக்டரிடம் ஆலோசிக்கவும். அத்துடன் நீங்கள் எடுத்துக்கொள்ளும் மற்ற அனைத்து மருந்துகள் குறித்தும் அவரிடம் கூறவும். டாக்டர் பரிந்துரைத்த மருந்தளவு, உட்கொள்ளும் முறை மற்றும் கால அளவைப் பின்பற்றவும். கடுமையான வயிற்றுப்போக்கு அல்லது ஸ்கின்னில் தடிப்பு போன்ற தொடர்ச்சியான அல்லது தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அது குறித்து ஆலோசிக்கவும். மேலும், டாக்டர் அறிவுறுத்தினாலன்றி, நீங்களாகவே இம்மருந்தை உட்கொள்வதை நிறுத்த வேண்டாம்.












































































