ஃப்ளூகா-150 டேப்லெட் என்பது வாய், த்ரோட், பிறப்புறுப்பு, ஸ்கின் மற்றும் நகங்களில் ஏற்படும் மவுத் த்ரஷ், பிறப்புறுப்பு த்ரஷ் மற்றும் படர்தாமரை போன்ற தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஒரு பூஞ்சை எதிர்ப்பு மருந்தாகும். இது உடல் முழுதும் பரவும் சில பூஞ்சைத் தொற்றுகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கு பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இதில் பூஞ்சை எதிர்ப்பு மருந்தான ஃபுளுகோனசோல் உள்ளது. இது பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம், தொற்றை நீக்குகிறது.
பரிந்துரைக்கப்பட்ட அளவு , உணவுடனோ அல்லது உணவு இல்லாமலோ எடுத்து கொள்ளலாம் , முழு சிகிச்சையையும் நிறைவு செய்யுங்கள்.
இது லிவரை பாதிக்கக்கூடும் என்பதால், இதைத் தொடங்குவதற்கு முன், உங்களுக்கு ஏதேனும் லிவர் அல்லது கிட்னி பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது வேறு மருந்துகள் எடுத்துக்கொண்டாலோ உங்கள் டாக்டரிடம் தெரிவிக்கவும், மேலும் ஸ்கின் அல்லது கண்கள் மஞ்சள் நிறமாக மாறினாலும் தெரிவிக்கவும்.




















































































